Colombo (News 1st) கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(08) தாமதமடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.