
எட்டியாந்தோட்டை புனிதமரியாள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக குழு கடந்த திங்கட்கிழமை (07.11.2022) தெரிவுசெய்யப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவரும் அகில் இலங்கை சமாதான நீதவானும் ஆசிரியருமான எஸ்.சிவசக்தி பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
யாப்பின் பிரகாரம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக பாடசாலை அதிபர் சாந்தகுமார் செயற்படுவார். உபத் தலைவராக பாடசாலையின் பழைய மாணவி திருமதி.தர்சினி தெரிவுசெய்யப்பட்டார்.
உபச் செயலாளராக பாடசாலையின் பழைய மாணவரும் ஊடகவியலாளருமான சு.நிஷாந்தன் தெரிவுசெய்யப்பட்டார். பொருளாளராக ஆசிரியர் எஸ்.தவசினும் ஆலோசகராக பாடசாலையின் பழைய மாணவரும் பூணுகல தமிழ் வித்தியாலயத்தின் அதிபருமான கே.ரகுநாதன் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோன்று செயற்குழு உறுப்பினர்களாக 10 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
பாடசாலை எதிர்கொண்டுள்ள பலவிதமான நெருக்கடிகள் மற்றும் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய சில விடயங்கள் புதிய நிர்வாக குழு தெரிவின் பின்னர் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் வாழும் எட்டியாந்தோட்டை புனிதமரியாள் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறும் புதிய நிர்வாக குழு அழைப்பு விடுத்துள்ளது.