Vijay - Favicon

ஊவா மாகாணத்தில் உணவுப் பற்றாக்குறை அதிகரிப்பு


இலங்கையிலுள்ள 32 சதவீதனமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்றவை என்று 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கான உணவுத் திட்டத்தின் வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 சதவீதமான இலங்கைக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தமது தொழிலுக்கு மேலதிகமாக வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்ள 48 சதவீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்தின் உணவுத் தேவைக்காக குடும்பம் வைத்திருந்த தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதியில் ஊவா மாகாணத்தில் அதிக உணவுப் பற்றாக்குறை காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஊவா மாகாணத்தில் கடந்த டிசெம்பரில் 43 சதவீதமாக இருந்த உணவுப் பற்றாக்குறை ஜனவரி மாத இறுதிக்குள் 47 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

நன்றி தமிழ் மிரர்

The post ஊவா மாகாணத்தில் உணவுப் பற்றாக்குறை அதிகரிப்பு appeared first on Malayagam.lk.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *