Vijay - Favicon

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது: ஜனாதிபதி உரை




Colombo (News 1st) இலங்கைக்கு கடன் வசதியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (20) அனுமதி வழங்கியது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். 

இதன்போது, நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

கிடைக்கப்பெற்று கடன் வசதி மூலம் நாட்டின் வழமையான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிக்கும் போது, இறக்குமதி கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், சுற்றுலாத்துறைக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முதற்கட்டமாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் IMF மற்றும் உலக வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி தனது உரையின் போது நன்றி தெரிவித்தார். 

அத்துடன், இவ்விடயம் தொடர்பான முழுமையான உரையினை நாளை (22) பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளதாகவும் ஒப்பந்தத்தை இதன்போது சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 
 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *