Vijay - Favicon

இலங்கைத் தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் கூடுதலான தொழில்வாய்ப்பு -சவுதி அரேபியத் தூதுவர்


பயிற்சிபெற்ற இலங்கை தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் Khalid bin Hamoud Nasser Aldasam Alkahtani தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் ஹாலிட் பின் நஸீர் சமீபத்தில் தனது நற்சான்றிதழ்களை கையளித்தப்பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்த்தித்தார்.

இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இந்த விடயத்தைக் கூறினார்.பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் கூடுதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுகொடுப்பதே தமது நோக்கம் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 4 இலட்சம் தொழிலாளர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு வழங்குவது இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *