Vijay - Favicon

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் நாட்டிற்கு வருகை




Colombo (News 1st) இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் லோர்ட் டேவிஸ்(Lord Davies) 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்களில் இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தக தூதுவர் ஈடுபடவுள்ளார். 

லோர்ட் டேவிஸ் வர்த்தக, அரச பங்குதாரர்களை சந்தித்து புதிய வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வணிக புரிந்துணர்வை மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

லோர்ட் டேவிஸை பிரதமரின் வர்த்தகத் தூதுவராக 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நியமித்திருந்தார். 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *