Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில் கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர் பயணித்த வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.