சப்பிரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி, பாம்கார்டன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அன்பு கொண்டோர் இதயங்களில் இருந்தருள்வாய் அம்மா
இரத்தினபுரியில் கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா
நன்மைகளைத் தந்தெம்மை வாழவைக்கும் தாயே
நம்பி வரும் அடியவர்க்கு அருள் தருவாய் அம்மா
பாம்காடன் வீற்றிருக்கும் தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா
தீமைகள் அண்டாமல் துடைத்தெறியும் தாயே
துணிவு தந்து எங்களை நீ வாழவைப்பாய் அம்மா
மலை சூழ்ந்த திருவிடத்தில் கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா
வாழ நல்ல வழிகாட்டி வளமளிக்கும் தாயே
வாழ்வுக்கு ஒளியேற்றி நன்மை செய்வாய் அம்மா
பெருந்தோட்ட மத்தியிலே கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா
மலைத்து நிற்போர் மனக்கவலை தீர்த்தருளும் தாயே
மானமுடன் எங்களை நீ வாழவைப்பாய் அம்மா
தமிழ் மக்கள் வாழுமிடம் கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா
மாரியம்மா என்றழைக்க வந்தருளும் தாயே
மதிதவறா நெறிநின்று எங்களை நீ வாழவைப்பாய் அம்மா
வளம் கொண்ட நன்னிலத்தில் கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை வாழ்வினையே எமக்களிப்பாய் அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலை வர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
The post இரத்தினபுரி, பாம்கார்டன் – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் appeared first on Malayagam.lk.