Vijay - Favicon

இந்தியாவின் குஜராத்தின் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரிப்பு


இந்தியாவின் குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 177 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் குஜராத்தின் மோபி பகுதியில் பாயும் மச்சு ஆற்றின் குறுக்கே 230 மீட்டர் நீளமுள்ள வரலாற்றுப் பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

150 ஆண்டுகள் பழமையான பாலம், புனரமைப்புக்காக 6 மாதங்களாக மூடப்பட்டு, கடந்த 26ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *