புத்தளம் தில்லையடியிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று(25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை நீதிமன்றத்தில் இன்று(25) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் தில்லையடியிலுள்ள பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வைபவம் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு
அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் குறித்த ஆசிரியரையும் தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம்(24) 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன் நேற்று(25) 17 மாணவர்களை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட 04 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.