Vijay - Favicon

அளவுக்கதிமான மருந்துப் பாவனை பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது


கொரோனா  தொற்றினால், மருந்துப் பாவனை மற்றும் அது தொடர்பான கவனயீர்ப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஏனெனில், அதிகமான நோயாளிகள் தாம் பெற்றுக்கொள்ளும் மருந்து பற்றிய எந்தத் தெளிவுமின்றி இருப்பதாகும்.

அளவுக்கதிமான மற்றும் அபரிதமான அவதானத்துடனான மருந்துப்பாவனை தான் 50வீதமான உலகில் சுகாதார சேவையுடன் தொடர்புபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

உலகில் மருந்துகளால்;; ஏற்படும் பாதிப்புகளுக்கு வருடாந்தம் சுமார் 42 பில்லியன் டொலர் செலவாகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு, 2022 செப்டம்பர் 17ஆம் திகதியை உலக நோயாளர் பாதுகாப்பு தினமாகத் தீர்மானித்து, மருந்துகளிலிருந்து பாதூகாப்பும் பெறும் வழிகாட்டலை வழங்க உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

அதற்கிணங்க நபரொருவர் ஏதேனும் மருந்தொன்றைப் பெற்றுக்கொள்ளும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

அதன்படி ஒவ்வொரு தனிமனிதனும் மருந்தொன்றை வாங்கும் போது, வாங்கும் மருந்தின் பெயர் மற்றும் அதனை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்,அம்மருந்தைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாது, தமது நோயின் நிலைப்பாடு மற்றும் இம்மருந்தை விட வேறு சிகிச்சை முறைகள் உள்ளதா,

ஏதேனும் ஒவ்வாமை அல்லது வேறு நோய் உள்ளதாயின் அது பற்றி தனது வைத்தியருக்குக் தெளிவுள்ளதா,
தான் இம்மருந்தை வைத்திருக்க முடியுமா போன்ற விடயங்கள் தொடர்பாக நன்கு அறிந்திருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *