Vijay - Favicon

அதிக பார்வையாளர்களைக் கடந்த பொத்துவில் அஸ்மினின் “ஐயோ சாமி” பாடல்!


விஜய் அன்டனியின் “நான்” திரைப்படத்தில் அறிமுகமாகி தென்னிந்தியாவில் முத்திரை பதித்து வரும் நம் நாட்டு இசை இளவரசன், கவிஞர் அஸ்மின் வரிகளில் வெளிவந்துள்ள புதிய பாடல் “ஐயோ சாமி”.

இந்தப்பாடலுக்கு சிங்களமொழியில் தேசிய விருது வென்ற பிரபல பாடகர், இசையமைப்பாளர் சனுக விக்ரமசிங்க இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை பாடகர் ரூகந்த குணதிலகவின் மகள் பிரபல சகோதர மொழி பாடகி விண்டி குணதிலக இதனைப்பாடியுள்ளார்.

பெண்களின் Breakup Song ஆக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் கவிஞர் அஸ்மினின் வரிகள் “நச்“ ரகம்.

அனிமேஷன் வீடியோவாக உருவாகியுள்ள காணொளிப்பாடலுக்கான வேலைகளை Vihayas Productions மற்றும் பிரசாத் அலுத்வத்த ஆகியோர் கவனித்துள்ளனர்.

“ஐயோ சாமி” பாடல் வெளியான முதல் நாளிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து தொடர்ந்தும் வெற்றி நடை போடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *